World best fashion, health & fitness products at one place

மேதகு (Methagu) Tamil Film

மேதகு (Methagu)

Methagu is a Tamil language political thriller written and directed by Kittu. The film has been produced by the Tamil Eelam Screen with the support of world Tamils. The music for the film is composed by Praveen. Initially, the film was expected to release on November 26, 2020. But due to the Corona epidemic and some issues it was postponed and it was said that it would be released in 2021. It was then released on the BS VALUE site on June 25, 2021. The film is based on the real events in Tamil Eelam and how the betrayals of Tamil Nadu there saw the repression and why LTTE leader Prabhakaran started fighting there for freedom. The film tells the early life story of LTTE leader Ven. Velupillai Prabhakaran. The film revolves around his biography and the story of the film. The film concludes with the political situation in Sri Lanka, the atrocities of Sinhala-Buddhist chauvinism, and the assassination of leader மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் and his comrades in the name of the Tamil New Tigers, the traitor mayor Thuraiyappa, who was complicit in the killing of nine Tamils ​​in a Sinhala attack on the World Tamil Research Conference in Jaffna. The film shows the struggles, life stories and events of Eelam Tamil life

Mr. Ninga is one of the most influential fighters in the history of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Way. Prabhakaran has produced a Tamil film titled ‘Medaku’ based on his early history. The film was made through a fundraiser by world Tamils.

The director captures very realistically and elegantly how the rights of Tamils ​​in Sri Lanka have been taken away and injustice done to them, and how an ordinary young man who has been angry since he was a child can end up armed for the liberation of his race.

The film is scripted and directed by T. Kittu. Also, cinematographer Riyaz, composer Praveen Kumar, art director Mujibur Raguman, cinematographer Ilangovan and screenwriter Vinayagam have co-edited the film.

If you want to view the film click the link  please.

India – ₹70/view

Other countries – $5/view

Install BSvalue application here👇🏽

Android https://play.google.com/store/apps/de…

Apple (outside India) https://apps.apple.com/us/app/bs-valu…

Apple (india) – watch in browser👇👇 https://bsvalue.com/auth?fromActivate…

The film was co-produced by Tanjay Kumar and Sumesh overseeing the production management. Ezwar Patsa and Satish are co-founders in the production management.

The film is set to release on June 25. Actor Sathyaraj, actor Rajesh, director Ponvannan, director Cheran, director Aamir, director Mari Selvaraj, director Gautham, and director Naveen shared the release announcement of the film on their social media sites.

 Lyricists Lyrics

1 Vasantham Boothathadi Udayaprakash Tamil Eelam National Poet. புதுவை ரத்தினதுரை 03:52

2 Roja Aditya Poet T. Thirukumaran in the 8th volume 03:65

3 Udayaprakash via Uthiram  Kit 03:14

actors

Easwar Pasha

Madhunika

Vijay

Anandan

Vinod Sagar (Ratchasan fame)

It is commendable that various works such as ‘Medaku’, which depicts the history of Tamils ​​in the form of art, continue to appear.

மேதகு (Methagu) என்பது கிட்டு எழுதி இயக்கியுள்ள தமிழ் மொழி அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தை தமிழீழ திரைகளம் உலக தமிழர்கள் பேராதரவோடு தயாரித்துள்ளது. இப்படத்திற்கான இசை பிரவீன் என்பவரால் அமைக்கபட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த திரைப்படம் நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், சில சிக்கல்களின் காரணமாகவும் அது ஒத்திவைக்கப்பட்டு 2021 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சூன் 25, 2021 இல் BS VALUE தளத்தில் வெளியானது. இத் திரைப்படமானது தமிழீழத்தில் உண்மையாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகவும் அங்கு தமிழினத்திற்கு நடந்த துரோகங்கள் ஒடுக்குமுறைகளை கண்டு எப்படி, ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார் என்பதனைப் பற்றி உள்ளது. இந்த திரைப்படம் விடுதலை புலிகள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது. இத்திரைப்படம் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் படத்தின் கதையும் பெரும்பாலும் அவரைச் சுற்றி வருகிறது. இலங்கையில் நடந்த அரசியல் சூழ்நிலை, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுமைகளும், யாழ்ப்பாணத்தில் நடந்த உலகதமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த சிங்கள தாக்குதலில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கு உடந்தையாக இருந்த துரோகி மேயர் துறையப்பாவை தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பின் பெயரில் தலைவர் பிரபாகரனும் அவர் தோழர்களும் கொலைசெய்ததை கடைசி காட்சியாக வைத்து இப்படம் முடிக்கப்பட்டுள்ளது. ஈழ தமிழர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும் வாழ்க்கைக் கதையும் சம்பவங்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் உலக தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறான் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.

இந்த திரைப்படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. மேலும் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு இளங்கோவன் மற்றும் திரை வண்ணம் விநாயகம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.

இந்த திரைப்படத்தினை தஞ்சை குமார் மற்றும் சுமேசு இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தில் ஈஸ்வர் பாட்சா மற்றும் சதீசு இருவரும் துணை புரிந்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஜூன்-25 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இந்த மேதகு திரைப்படத்தின் சிறப்பு காட்சியினை பார்வையிட்ட நடிகர் சத்யராஜ், நடிகர் ராஜேஷ், இயக்குனர் பொன்வண்ணன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் கவுதமன், மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பினை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிசை எண்.பாடல்பாடகர்கள்வரிகள்நீளம் (m:ss)
1வசந்தம் பூத்ததடிஉதய்பிரகாஷ்தமிழீழ தேசியக்கவி. புதுவை இரத்தினதுரை03:52
2எட்டுத்தொக ஏட்டுக்குள்ளரோஜா ஆதித்யாகவிஞர் தி.திருக்குமரன்03:65
3உதிரம் வழியஉதய்பிரகாஷ்தி. கிட்டு03:14

நடிகர்கள்

Spread the love

We will be happy to hear your thoughts

Leave a reply

Best  fashion, mobile phones, accessories, Health, fitness products, drones at one place
Logo
Enable registration in settings - general
Compare items
  • Total (0)
Compare
0