World best fashion, health & fitness products at one place

A Good society is created by a good family and good family is always decided by a Happy Married Life !! where are you now?!

A Good society is created by a good family and good family is always decided by a Happy Married Life !! where are you now?!

*உடைந்த காலம்.*…

*நட்பு உடைந்து முகநூலானது..*.

*சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது.*..

*வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது.*..

*உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது…*

*குளக்கரை உடைந்து குளியலறை ஆனது..*.

*நெற்களம் உடைந்து கட்டடமானது.*..

*காலநிலை உடைந்து வெப்பமயமானது..*.

*வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது…*

*துணிப்பை உடைந்து நெகிழியானது..*.

*அங்காடி உடைந்து அமேசான் ஆனது…*

*விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது…*

*ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது…*

*கடிதம் உடைந்து இமெயிலானது…*

*விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது…*

*பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது…*

*புத்தகம் உடைந்து புக் ஆனது…*

*சோறு உடைந்து ‘ஓட்ஸ்சாய்ப் போனது..*

*இட்லி உடைந்து பர்கர் ஆனது…*

*தோசை உடைந்து பிட்சாவானது…*

*குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது…*

*பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது…*

*வெற்றிலை உடைந்து பீடாவானது…*

*தொலைபேசி உடைந்து கைபேசியானது…*

*வங்கி உடைந்து பே டி எம் ஆனது…*

*நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது…*

*புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது…*

*மார்க்கம் உடைந்து மதவெறியானது…*

*அரசியல் உடைந்து அருவெறுப்பானது…*

*பொதுநலம் உடைந்து சுயநலமானது…*

*பொறுமை உடைந்து அவசரமானது…*

*ஊடல் உடைந்து விவாகரத்தானது…*

*காதல் உடைந்து காமமாய்ப் போனது…*

*நிரந்தரம் உடைவது நிதர்சனம்* *ஆகையால்…*

*உடைவது உலகினில் நிரந்தரமானது…*

*தீயவை உடைத்து நீ தீங்கறச் செய்திடில்…*

*அல்லவை உடைந்திங்கு நல்லவை வாழுமே…*

நன்றி

*படித்ததில் பிடித்தது…*

*Buy one get one free concept*

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்

என்பது வியாபாரதில் மட்டுமல்ல,

வாழ்க்கையிலும் பல சமயம்

நடக்கின்றது…!

உதாரணத்திற்கு

கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்!

பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்!

வெறுப்பை வாங்கினால்வேண்டாத பகை இலவசம்!

கவலையை வாங்கினால்கண்ணீர் இலவசம்!

மாறாக….

நம்பிக்கையை வாங்கினால்நண்பர்கள் இலவசம்!

உடற்பயிற்சியை வாங்கினால்ஆரோக்கியம் இலவசம்!

அமைதியை வாங்கினால்ஆனந்தம் இலவசம்!

நேர்மையை வாங்கினால்நித்திரை இலவசம்!

அன்பை வாங்கினால்…..

அனைத்து நன்மைகளும் இலவசம்.

இலவசமாக எது வேண்டுமென்று

இன்றேனும் முடிவு செய்யுங்கள் 🙏

*படித்ததில் பிடித்தது…*

Spread the love

We will be happy to hear your thoughts

Leave a reply

Best  fashion, mobile phones, accessories, Health, fitness products, drones at one place
Logo
Enable registration in settings - general
Compare items
  • Total (0)
Compare
0